வினைத் தூய்மை
 
651. துணை நலம் ஆக்கம் தரூஉம்; வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும்.

651

பதிவிறக்கம் செய்ய
உரை
 
652. என்றும் ஒருவுதல் வேண்டும்-புகழொடு
நன்றி பயவா வினை.

652

பதிவிறக்கம் செய்ய
உரை
 
653. ஓஒதல் வேண்டும், ஒளி மாழ்கும் செய்வினை-
‘ஆஅதும்!’ என்னுமவர்.

653

பதிவிறக்கம் செய்ய
உரை
 
654. இடுக்கண் படினும், இளிவந்த செய்யார்-
நடுக்கு அற்ற காட்சியவர்.

654

பதிவிறக்கம் செய்ய
உரை
 
655. 'எற்று!' என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்,
மற்று அன்ன செய்யாமை நன்று.

655

பதிவிறக்கம் செய்ய
உரை
 
656. ஈன்றாள் பசி காண்பான் ஆயினும், செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

656

பதிவிறக்கம் செய்ய
உரை
 
657. பழி மலைந்து எய்திய ஆக்கத்தின், சான்றோர்
கழி நல்குரவே தலை.

657

பதிவிறக்கம் செய்ய
உரை
 
658. கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும், பீழை தரும்.

658

பதிவிறக்கம் செய்ய
உரை
 
659. அழக் கொண்ட எல்லாம் அழப் போம்; இழப்பினும்,
பிற்பயக்கும், நற்பாலவை.

659

பதிவிறக்கம் செய்ய
உரை
 
660. சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல்-பசு மண்-
கலத்துள் நீர் பெய்து, இரீஇயற்று.

660

பதிவிறக்கம் செய்ய
உரை