தொடக்கம் | ||
தூது
|
||
681. | அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்து அவாம் பண்பு உடைமை,- தூது உரைப்பான் பண்பு. |
681 பதிவிறக்கம் செய்யஉரை |
682. | அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை-தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று. |
682 பதிவிறக்கம் செய்யஉரை |
683. | நூலாருள் நூல் வல்லன் ஆகுதல்-வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு. |
683 பதிவிறக்கம் செய்யஉரை |
684. | அறிவு, உரு, ஆராய்ந்த கல்வி, இம் மூன்றன் செறிவு உடையான் செல்க, வினைக்கு. |
684 பதிவிறக்கம் செய்யஉரை |
685. | தொகச் சொல்லி, தூவாத நீக்கி, நகச் சொல்லி, நன்றி பயப்பது ஆம்-தூது. |
685 பதிவிறக்கம் செய்யஉரை |
686. | கற்று, கண் அஞ்சான், செலச் சொல்லி, காலத்தால் தக்கது அறிவது ஆம்-தூது. |
686 பதிவிறக்கம் செய்யஉரை |
687. | கடன் அறிந்து, காலம் கருதி, இடன் அறிந்து, எண்ணி, உரைப்பான் தலை. |
687 பதிவிறக்கம் செய்யஉரை |
688. | தூய்மை, துணைமை, துணிவு உடைமை, இம் மூன்றின் வாய்மை-வழி உரைப்பான் பண்பு. |
688 பதிவிறக்கம் செய்யஉரை |
689. | விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்-வடு மாற்றம் வாய் சோரா வன்கணவன். |
689 பதிவிறக்கம் செய்யஉரை |
690. | இறுதி பயப்பினும், எஞ்சாது, இறைவற்கு உறுதி பயப்பது ஆம்-தூது. |
690 பதிவிறக்கம் செய்யஉரை |