குறிப்பு அறிதல்
 
701. கூறாமை நோக்கி, குறிப்பு அறிவான், எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி.

701

பதிவிறக்கம் செய்ய
உரை
 
702. ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்!.

702

பதிவிறக்கம் செய்ய
உரை
 
703. குறிப்பின் குறிப்பு உணர்வாரை, உறுப்பினுள்
யாது கொடுத்தும், கொளல்!.

703

பதிவிறக்கம் செய்ய
உரை
 
704. குறித்தது கூறாமைக் கொள்வாரொடு, ஏனை
உறுப்பு ஓரனையரால், வேறு.

704

பதிவிறக்கம் செய்ய
உரை
 
705. குறிப்பின் குறிப்பு உணராஆயின், உறுப்பினுள்
என்ன பயத்தவோ, கண்?.

705

பதிவிறக்கம் செய்ய
உரை
 
706. அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம்
கடுத்தது காட்டும், முகம்.

706

பதிவிறக்கம் செய்ய
உரை
 
707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ-உவப்பினும்
காயினும், தான் முந்துறும்?

707

பதிவிறக்கம் செய்ய
உரை
 
708. முகம் நோக்கி நிற்க அமையும்-அகம் நோக்கி,
உற்றது உணர்வார்ப் பெறின்.

708

பதிவிறக்கம் செய்ய
உரை
 
709. பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்-கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

709

பதிவிறக்கம் செய்ய
உரை
 
710. 'நுண்ணியம்' என்பார் அளக்கும் கோல், காணுங்கால்,
கண் அல்லது, இல்லை பிற.

710

பதிவிறக்கம் செய்ய
உரை