| தொடக்கம் | ||
| அவை அறிதல்
|
||
| 711. | அவை அறிந்து, ஆராய்ந்து, சொல்லுக-சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்!. |
711 பதிவிறக்கம் செய்யஉரை |
| 712. | இடை தெரிந்து, நன்கு உணர்ந்து, சொல்லுக- சொல்லின் நடை தெரிந்த நன்மையவர்!. |
712 பதிவிறக்கம் செய்யஉரை |
| 713. | அவை அறியார், சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார்; வல்லதூஉம் இல். |
713 பதிவிறக்கம் செய்யஉரை |
| 714. | ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்! வெளியார்முன் வான் சுதை வண்ணம் கொளல்!. |
714 பதிவிறக்கம் செய்யஉரை |
| 715. | 'நன்று' என்றவற்றுள்ளும் நன்றே-முதுவருள் முந்து கிளவாச் செறிவு. |
715 பதிவிறக்கம் செய்யஉரை |
| 716. | ஆற்றின் நிலைதளர்ந்தற்றே-வியன் புலம் ஏற்று, உணர்வார்முன்னர் இழுக்கு. |
716 பதிவிறக்கம் செய்யஉரை |
| 717. | கற்று அறிந்தார் கல்வி விளங்கும்-கசடு அறச் சொல் தெரிதல் வல்லார் அகத்து. |
717 பதிவிறக்கம் செய்யஉரை |
| 718. | உணர்வது உடையார்முன் சொல்லல்-வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று. |
718 பதிவிறக்கம் செய்யஉரை |
| 719. | புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க-நல் அவையுள் நன்கு செலச் சொல்லுவார்!. |
719 பதிவிறக்கம் செய்யஉரை |
| 720. | அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால்-தம் கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்!. |
720 பதிவிறக்கம் செய்யஉரை |