| தொடக்கம் | ||
| அவை அஞ்சாமை
|
||
| 721. | வகை அறிந்து, வல் அவை, வாய்சோரார்-சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர். |
721 பதிவிறக்கம் செய்யஉரை |
| 722. | கற்றாருள் கற்றார் எனப்படுவர்-கற்றார்முன் கற்ற செலச் சொல்லுவார். |
722 பதிவிறக்கம் செய்யஉரை |
| 723. | பகையகத்துச் சாவார் எளியர்; அரியர் அவையகத்து அஞ்சாதவர். |
723 பதிவிறக்கம் செய்யஉரை |
| 724. | கற்றார்முன் கற்ற செலச் சொல்லி, தாம் கற்ற, மிக்காருள், மிக்க கொளல். |
724 பதிவிறக்கம் செய்யஉரை |
| 725. | ஆற்றின், அளவு அறிந்து கற்க-அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற்பொருட்டு. |
725 பதிவிறக்கம் செய்யஉரை |
| 726. | வாளொடு என், வன்கண்ணர் அல்லார்க்கு?-நூலொடு என், நுண் அவை அஞ்சுபவர்க்கு?. |
726 பதிவிறக்கம் செய்யஉரை |
| 727. | பகையகத்துப் பேடி கை ஒள் வாள்-அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல். |
727 பதிவிறக்கம் செய்யஉரை |
| 728. | பல்லவை கற்றும், பயம் இலரே-நல் அவையுள் நன்கு செலச் சொல்லாதார். |
728 பதிவிறக்கம் செய்யஉரை |
| 729. | 'கல்லாதவரின் கடை' என்ப- ‘கற்று அறிந்தும், நல்லார் அவை அஞ்சுவார்'. |
729 பதிவிறக்கம் செய்யஉரை |
| 730. | உளர் எனினும், இல்லாரொடு ஒப்பர்-களன் அஞ்சி, கற்ற செலச் சொல்லாதார். |
730 பதிவிறக்கம் செய்யஉரை |