நாடு
 
731. தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்வு இலாச்
செல்வரும், சேர்வது- நாடு.

731

பதிவிறக்கம் செய்ய
உரை
 
732. பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி, அருங் கேட்டால்,
ஆற்ற விளைவது-நாடு.

732

பதிவிறக்கம் செய்ய
உரை
 
733. பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி, இறைவற்கு
இறை ஒருங்கு நேர்வது-நாடு.

733

பதிவிறக்கம் செய்ய
உரை
 
734. உறு பசியும், ஓவாப் பிணியும், செறு பகையும்,
சேராது இயல்வது-நாடு.

734

பதிவிறக்கம் செய்ய
உரை
 
735. பல் குழுவும், பாழ்செய்யும் உட்பகையும், வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது-நாடு.

735

பதிவிறக்கம் செய்ய
உரை
 
736. கேடு அறியா, கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு, என்ப, நாட்டின் தலை.

736

பதிவிறக்கம் செய்ய
உரை
 
737. இரு புனலும், வாய்ந்த மலையும், வரு புனலும்,
வல் அரணும்-நாட்டிற்கு உறுப்பு.

737

பதிவிறக்கம் செய்ய
உரை
 
738. பிணி இன்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம்-
அணி என்ப, நாட்டிற்கு-இவ் ஐந்து.

738

பதிவிறக்கம் செய்ய
உரை
 
739. நாடு என்ப, நாடா வளத்தன; நாடு அல்ல,
நாட, வளம் தரும் நாடு.

739

பதிவிறக்கம் செய்ய
உரை
 
740. ஆங்கு அமைவு எய்தியக்கண்ணும் பயம் இன்றே-
வேந்து அமைவு இல்லாத நாடு.

740

பதிவிறக்கம் செய்ய
உரை