| தொடக்கம் | ||
| அரண்
|
||
| 741. | ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித் தற் போற்றுபவர்க்கும் பொருள். |
741 பதிவிறக்கம் செய்யஉரை |
| 742. | மணி நீரும், மண்ணும், மலையும், அணி நிழல் காடும், உடையது-அரண். |
742 பதிவிறக்கம் செய்யஉரை |
| 743. | 'உயர்வு, அகலம், திண்மை, அருமை, இந் நான்கின் அமைவு அரண்'.என்று உரைக்கும் நூல். |
743 பதிவிறக்கம் செய்யஉரை |
| 744. | சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி, உறு பகை ஊக்கம் அழிப்பது-அரண். |
744 பதிவிறக்கம் செய்யஉரை |
| 745. | கொளற்கு அரிதாய், கொண்ட கூழ்த்து ஆகி, அகத்தார் நிலைக்கு எளிது ஆம் நீரது-அரண். |
745 பதிவிறக்கம் செய்யஉரை |
| 746. | எல்லாப் பொருளும் உடைத்தாய், இடத்து உதவும் நல் ஆள் உடையது-அரண். |
746 பதிவிறக்கம் செய்யஉரை |
| 747. | முற்றியும், முற்றாது எறிந்தும், அறைப்படுத்தும், பற்றற்கு அரியது-அரண். |
747 பதிவிறக்கம் செய்யஉரை |
| 748. | முற்று ஆற்றி முற்றியவரையும், பற்று ஆற்றி, பற்றியார் வெல்வது-அரண். |
748 பதிவிறக்கம் செய்யஉரை |
| 749. | முனை முகத்து மாற்றலர் சாய, வினைமுகத்து வீறு எய்தி மாண்டது-அரண். |
749 பதிவிறக்கம் செய்யஉரை |
| 750. | எனை மாட்சித்து ஆகியக்கண்ணும், வினை மாட்சி இல்லார்கண் இல்லது-அரண். |
750 பதிவிறக்கம் செய்யஉரை |