படை
 
761. உறுப்பு அமைந்து, ஊறு அஞ்சா, வெல் படை-வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

761

பதிவிறக்கம் செய்ய
உரை
 
762. உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண், தொலைவு இடத்து,
தொல் படைக்கு அல்லால், அரிது.

762

பதிவிறக்கம் செய்ய
உரை
 
763. ஒலித்தக்கால் என் ஆம், உவரி எலிப்பகை?
நாகம் உயிர்ப்ப, கெடும்.

763

பதிவிறக்கம் செய்ய
உரை
 
764. அழிவு இன்று, அறைபோகாது ஆகி, வழிவந்த
வன்கணதுவே-படை.

764

பதிவிறக்கம் செய்ய
உரை
 
765. கூற்று உடன்று மேல்வரினும், கூடி, எதிர் நிற்கும்
ஆற்றலதுவே-படை.

765

பதிவிறக்கம் செய்ய
உரை
 
766. மறம், மானம், மாண்ட வழிச் செலவு, தேற்றம்,
என நான்கே ஏமம், படைக்கு.

766

பதிவிறக்கம் செய்ய
உரை
 
767. தார் தாங்கிச் செல்வது தானை-தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து.

767

பதிவிறக்கம் செய்ய
உரை
 
768. அடல்தகையும், ஆற்றலும், இல் எனினும், தானை
படைத் தகையான் பாடு பெறும்.

768

பதிவிறக்கம் செய்ய
உரை
 
769. சிறுமையும், செல்லாத் துனியும், வறுமையும்,
இல்லாயின் வெல்லும், படை.

769

பதிவிறக்கம் செய்ய
உரை
 
770. நிலை மக்கள் சால உடைத்துஎனினும், தானை
தலைமக்கள் இல்வழி இல்.

770

பதிவிறக்கம் செய்ய
உரை