படைச் செருக்கு
 
771. என்னை முன் நில்லன்மின்-தெவ்விர்! பலர், என்னை
முன் நின்று கல் நின்றவர்.

771

பதிவிறக்கம் செய்ய
உரை
 
772. கான முயல் எய்த அம்பினில், யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது.

772

பதிவிறக்கம் செய்ய
உரை
 
773. பேர் ஆண்மை என்ப, தறுகண்; ஒன்று உற்றக்கால்,
ஊராண்மை மற்று அதன் எஃகு.

773

பதிவிறக்கம் செய்ய
உரை
 
774. கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா, நகும்.

774

பதிவிறக்கம் செய்ய
உரை
 
775. விழித்த கண் வேல் கொண்டு எறிய, அழித்து இமைப்பின்,
ஓட்டு அன்றோ, வன்கணவர்க்கு?.

775

பதிவிறக்கம் செய்ய
உரை
 
776. விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும், தன் நாளை எடுத்து.

776

பதிவிறக்கம் செய்ய
உரை
 
777. சுழலும் இசை வேண்டி, வேண்டா உயிரார்
கழல் யாப்புக் காரிகை நீர்த்து.

777

பதிவிறக்கம் செய்ய
உரை
 
778. உறின், உயிர் அஞ்சா மறவர், இறைவன்
செறினும், சீர் குன்றல் இலர்.

778

பதிவிறக்கம் செய்ய
உரை
 
779. இழைத்தது இகவாமைச் சாவாரை, யாரே,
பிழைத்தது ஒறுக்கிற்பவர்?.

779

பதிவிறக்கம் செய்ய
உரை
 
780. புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின், சாக்காடு
இரந்து கோள்-தக்கது உடைத்து.

780

பதிவிறக்கம் செய்ய
உரை