தொடக்கம் | ||
நட்பு
|
||
781. | செயற்கு அரிய யா உள, நட்பின்?-அதுபோல் வினைக்கு அரிய யா உள, காப்பு?. |
781 பதிவிறக்கம் செய்யஉரை |
782. | நிறை நீர, நீரவர் கேண்மை, பிறை; மதிப் பின் நீர, பேதையார் நட்பு. |
782 பதிவிறக்கம் செய்யஉரை |
783. | நவில்தொறும் நூல் நயம் போலும்-பயில்தொறும், பண்பு உடையாளர் தொடர்பு. |
783 பதிவிறக்கம் செய்யஉரை |
784. | நகுதற்பொருட்டு அன்று, நட்டல்; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு. |
784 பதிவிறக்கம் செய்யஉரை |
785. | புணர்ச்சி, பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பு ஆம் கிழமை தரும். |
785 பதிவிறக்கம் செய்யஉரை |
786. | முகம் நக, நட்பது நட்பு அன்று; நெஞ்சத்து அகம் நக, நட்பது-நட்பு. |
786 பதிவிறக்கம் செய்யஉரை |
787. | அழிவினவை நீக்கி, ஆறு உய்த்து, அழிவின்கண் அல்லல் உழப்பது ஆம்-நட்பு. |
787 பதிவிறக்கம் செய்யஉரை |
788. | உடுக்கை இழந்தவன் கை போல, ஆங்கே இடுக்கண் களைவது ஆம்-நட்பு. |
788 பதிவிறக்கம் செய்யஉரை |
789. | 'நட்பிற்கு வீற்றிருக்கை யாது?' எனின், கொட்பு இன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. |
789 பதிவிறக்கம் செய்யஉரை |
790. | 'இனையர், இவர் எமக்கு; இன்னம் யாம்' என்று புனையினும், புல்லென்னும்-நட்பு. |
790 பதிவிறக்கம் செய்யஉரை |