பழைமை
 
801. 'பழைமை எனப்படுவது யாது?' எனின், யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

801

பதிவிறக்கம் செய்ய
உரை
 
802. நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன்.

802

பதிவிறக்கம் செய்ய
உரை
 
803. பழகிய நட்பு எவன் செய்யும்-கெழுதகைமை
செய்தாங்கு அமையாக்கடை?.

803

பதிவிறக்கம் செய்ய
உரை
 
804. விழைதகையான் வேண்டியிருப்பர்-கெழுதகையான்
கேளாது நட்டார் செயின்.

804

பதிவிறக்கம் செய்ய
உரை
 
805. பேதைமை ஒன்றோ, பெருங்கிழமை என்று உணர்க-
நோ தக்க நட்டார் செயின்!.

805

பதிவிறக்கம் செய்ய
உரை
 
806. எல்லைக்கண் நின்றார் துறவார்-தொலைவிடத்தும்,
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

806

பதிவிறக்கம் செய்ய
உரை
 
807. அழிவந்த செய்யினும், அன்பு அறார்-அன்பின்
வழிவந்த கேண்மையவர்.

807

பதிவிறக்கம் செய்ய
உரை
 
808. கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள், இழுக்கம் நட்டார் செயின்.

808

பதிவிறக்கம் செய்ய
உரை
 
809. கெடாஅர், வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும், உலகு.

809

பதிவிறக்கம் செய்ய
உரை
 
810. விழையார் விழையப்படுப-பழையார்கண்
பண்பின் தலைப்பிரியாதார்.

810

பதிவிறக்கம் செய்ய
உரை