கூடா நட்பு
 
821. சீர் இடம் காணின், எறிதற்குப் பட்டடை-
நேரா நிரந்தவர் நட்பு.

821

பதிவிறக்கம் செய்ய
உரை
 
822. இனம் போன்று இனம் அல்லார் கேண்மை, மகளிர்
மனம் போல, வேறுபடும்.

822

பதிவிறக்கம் செய்ய
உரை
 
823. பல நல்ல கற்றக்கடைத்தும், மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது.

823

பதிவிறக்கம் செய்ய
உரை
 
824. முகத்தின் இனிய நகாஅ, அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப்படும்.

824

பதிவிறக்கம் செய்ய
உரை
 
825. மனத்தின் அமையாதவரை, எனைத்து ஒன்றும்,
சொல்லினான் தேறற்பாற்று அன்று.

825

பதிவிறக்கம் செய்ய
உரை
 
826. நட்டார்போல் நல்லவை சொல்லினும், ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும்.

826

பதிவிறக்கம் செய்ய
உரை
 
827. சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க-வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான்!.

827

பதிவிறக்கம் செய்ய
உரை
 
828. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்; ஒன்னார்
அழுத கண்ணீரும், அனைத்து.

828

பதிவிறக்கம் செய்ய
உரை
 
829. மிகச் செய்து, தம் எள்ளுவாரை நகச் செய்து,
நட்பினுள் சாப் புல்லற்பாற்று.

829

பதிவிறக்கம் செய்ய
உரை
 
830. பகை நட்பு ஆம் காலம் வருங்கால், முகம் நட்டு,
அகம் நட்பு ஒரீஇவிடல்!.

830

பதிவிறக்கம் செய்ய
உரை