தொடக்கம் | ||
புல்லறிவு ஆண்மை
|
||
841. | அறிவு இன்மை, இன்மையுள் இன்மை, பிறிது இன்மை இன்மையா வையாது, உலகு. |
841 பதிவிறக்கம் செய்யஉரை |
842. | அறிவு இலான் நெஞ்சு உவந்து ஈதல், பிறிது யாதும் இல்லை, பெறுவான் தவம். |
842 பதிவிறக்கம் செய்யஉரை |
843. | அறிவு இலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. |
843 பதிவிறக்கம் செய்யஉரை |
844. | 'வெண்மை எனப்படுவது யாது?' எனின், ‘ஒண்மை உடையம் யாம்!’ என்னும் செருக்கு. |
844 பதிவிறக்கம் செய்யஉரை |
845. | கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கசடு அற வல்லதூஉம், ஐயம் தரும். |
845 பதிவிறக்கம் செய்யஉரை |
846. | அற்றம் மறைத்தலோ புல்லறிவு-தம்வயின் குற்றம் மறையாவழி. |
846 பதிவிறக்கம் செய்யஉரை |
847. | அரு மறை சோரும் அறிவு இலான் செய்யும், பெரு மிறை, தானே தனக்கு. |
847 பதிவிறக்கம் செய்யஉரை |
848. | ஏவவும் செய்கலான், தான் தேறான், அவ் உயிர் போஒம் அளவும் ஓர் நோய். |
848 பதிவிறக்கம் செய்யஉரை |
849. | காணாதாற் காட்டுவான் தான் காணான்; காணாதான் கண்டான் ஆம், தான் கண்ட ஆறு. |
849 பதிவிறக்கம் செய்யஉரை |
850. | உலகத்தார், ‘உண்டு’ என்பது ‘இல்’ என்பான் வையத்து அலகையா வைக்கப்படும். |
850 பதிவிறக்கம் செய்யஉரை |