இகல்
 
851. இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.

851

பதிவிறக்கம் செய்ய
உரை
 
852. பகல் கருதிப் பற்றா செயினும், இகல் கருதி,
இன்னா செய்யாமை தலை.

852

பதிவிறக்கம் செய்ய
உரை
 
853. இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின், தவல் இல்லாத்
தா இல் விளக்கம் தரும்.

853

பதிவிறக்கம் செய்ய
உரை
 
854. இன்பத்துள் இன்பம் பயக்கும்-இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

854

பதிவிறக்கம் செய்ய
உரை
 
855. இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை, யாரே,
மிகல் ஊக்கும் தன்மையவர்?.

855

பதிவிறக்கம் செய்ய
உரை
 
856. இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

856

பதிவிறக்கம் செய்ய
உரை
 
857. மிகல் மேவல் மெய்ப் பொருள் காணார்-இகல் மேவல்
இன்னா அறிவினவர்.

857

பதிவிறக்கம் செய்ய
உரை
 
858. இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம்; அதனை
மிகல் ஊக்கின், ஊக்குமாம் கேடு.

858

பதிவிறக்கம் செய்ய
உரை
 
859. இகல்காணான், ஆக்கம் வருங்கால்; அதனை
மிகல் காணும், கேடு தரற்கு.

859

பதிவிறக்கம் செய்ய
உரை
 
860. இகலான் ஆம், இன்னாத எல்லாம்; நகலான் ஆம்,
நல் நயம் என்னும் செருக்கு.

860

பதிவிறக்கம் செய்ய
உரை