பகைத் திறம் தெரிதல்
 
871. பகை என்னும் பண்புஇலதனை, ஒருவன்
நகையேயும், வேண்டற்பாற்று அன்று.

871

பதிவிறக்கம் செய்ய
உரை
 
872. வில் ஏர் உழவர் பகை கொளினும், கொள்ளற்க-
சொல் ஏர் உழவர் பகை!.

872

பதிவிறக்கம் செய்ய
உரை
 
873. ஏமுற்றவரினும் ஏழை-தமியனாய்ப்
பல்லார் பகை கொள்பவன்.

873

பதிவிறக்கம் செய்ய
உரை
 
874. பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமைக்கண் தங்கிற்று, உலகு.

874

பதிவிறக்கம் செய்ய
உரை
 
875. தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்
இன் துணையாக் கொள்க, அவற்றின் ஒன்று!.

875

பதிவிறக்கம் செய்ய
உரை
 
876. தேறினும், தேறாவிடினும், அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்!.

876

பதிவிறக்கம் செய்ய
உரை
 
877. நோவற்க, நொந்தது அறியார்க்கு! மேவற்க,
மென்மை, பகைவரகத்து!.

877

பதிவிறக்கம் செய்ய
உரை
 
878. வகை அறிந்து, தற் செய்து, தற் காப்ப, மாயும்-
பகைவர்கண் பட்ட செருக்கு.

878

பதிவிறக்கம் செய்ய
உரை
 
879. இளைதாக முள்மரம் கொல்க- களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து!.

879

பதிவிறக்கம் செய்ய
உரை
 
880. உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற-செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார்.

880

பதிவிறக்கம் செய்ய
உரை