உட்பகை
 
881. நிழல் நீரும் இன்னாத இன்னா-தமர் நீரும்,
இன்னா ஆம், இன்னா செயின்.

881

பதிவிறக்கம் செய்ய
உரை
 
882. வாள்போல் பகைவரை அஞ்சற்க! அஞ்சுக,
கேள்போல் பகைவர் தொடர்பு.

882

பதிவிறக்கம் செய்ய
உரை
 
883. உட்பகை அஞ்சித் தற் காக்க! உலைவு இடத்து,
மட்பகையின் மாணத் தெறும்.

883

பதிவிறக்கம் செய்ய
உரை
 
884. மனம் மாணா உட்பகை தோன்றின், இனம் மாணா
ஏதம் பலவும் தரும்.

884

பதிவிறக்கம் செய்ய
உரை
 
885. உறல் முறையான் உட்பகை தோன்றின், இறல் முறையான்
ஏதம் பலவும் தரும்.

885

பதிவிறக்கம் செய்ய
உரை
 
886. ஒன்றாமை ஒன்றியார்கண் படின், எஞ்ஞான்றும்,
பொன்றாமை ஒன்றல் அரிது.

886

பதிவிறக்கம் செய்ய
உரை
 
887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும், கூடாதே-
உட்பகை உற்ற குடி.

887

பதிவிறக்கம் செய்ய
உரை
 
888. அரம் பொருத பொன் போல, தேயும் உரம், பொருது-
உட்பகை உற்ற குடி.

888

பதிவிறக்கம் செய்ய
உரை
 
889. எட் பகவு அன்ன சிறுமைத்தேஆயினும்,
உட்பகை, உள்ளது ஆம், கேடு.

889

பதிவிறக்கம் செய்ய
உரை
 
890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-குடங்கருள்
பாம்போடு உடன் உறைந்தற்று.

890

பதிவிறக்கம் செய்ய
உரை