பெண்வழிச் சேறல்
 
901. மனை விழைவார் மாண் பயன் எய்தார்; வினை விழைவார்
வேண்டாப் பொருளும் அது.

901

பதிவிறக்கம் செய்ய
உரை
 
902. பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக, நாணுத் தரும்.

902

பதிவிறக்கம் செய்ய
உரை
 
903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை, எஞ்ஞான்றும்,
நல்லாருள் நாணுத் தரும்.

903

பதிவிறக்கம் செய்ய
உரை
 
904. மனையாளை அஞ்சும் மறுமைஇலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று.

904

பதிவிறக்கம் செய்ய
உரை
 
905. இல்லாளை அஞ்சுவான், அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்,
நல்லார்க்கு நல்ல செயல்.

905

பதிவிறக்கம் செய்ய
உரை
 
906. இமையாரின் வாழினும், பாடு இலரே-இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர்.

906

பதிவிறக்கம் செய்ய
உரை
 
907. பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின், நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

907

பதிவிறக்கம் செய்ய
உரை
 
908. நட்டார் குறை முடியார்; நன்று ஆற்றார்;-நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகுபவர்.

908

பதிவிறக்கம் செய்ய
உரை
 
909. அறவினையும், ஆன்ற பொருளும், பிற வினையும்,-
பெண் ஏவல் செய்வார்கண் இல்.

909

பதிவிறக்கம் செய்ய
உரை
 
910. எண் சேர்ந்த நெஞ்சத்து, இடன் உடையார்க்கு, எஞ்ஞான்றும்,
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல்.

910

பதிவிறக்கம் செய்ய
உரை