வரைவு இல் மகளிர்
 
911. அன்பின் விழையார், பொருள் விழையும் ஆய்தொடியார்
இன் சொல் இழுக்குத் தரும்.

911

பதிவிறக்கம் செய்ய
உரை
 
912. பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்
நயன் தூக்கி, நள்ளா விடல்!.

912

பதிவிறக்கம் செய்ய
உரை
 
913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்-இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇயற்று.

913

பதிவிறக்கம் செய்ய
உரை
 
914. பொருட்பொருளார் புன் நலம் தோயார்-அருட் பொருள்
ஆயும் அறிவினவர்.

914

பதிவிறக்கம் செய்ய
உரை
 
915. பொது நலத்தார் புன் நலம் தோயார்-மதி நலத்தின்
மாண்ட அறிவினவர்.

915

பதிவிறக்கம் செய்ய
உரை
 
916. தம் நலம் பாரிப்பார் தோயார்- தகை செருக்கி,
புன் நலம் பாரிப்பார் தோள்.

916

பதிவிறக்கம் செய்ய
உரை
 
917. நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர்-பிற நெஞ்சில்
பேணி, புணர்பவர் தோள்.

917

பதிவிறக்கம் செய்ய
உரை
 
918. 'ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு' என்ப-
‘மாய மகளிர் முயக்கு'.

918

பதிவிறக்கம் செய்ய
உரை
 
919. வரைவு இலா மாண் இழையார் மென் தோள்-புரை இலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

919

பதிவிறக்கம் செய்ய
உரை
 
920. இரு மனப் பெண்டிரும், கள்ளும், கவறும்.-
திரு நீக்கப்பட்டார் தொடர்பு.

920

பதிவிறக்கம் செய்ய
உரை