மருந்து
 
941. மிகினும் குறையினும், நோய் செய்யும்-நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று.

941

பதிவிறக்கம் செய்ய
உரை
 
942. மருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு- அருந்தியது,
அற்றது போற்றி உணின்.

942

பதிவிறக்கம் செய்ய
உரை
 
943. அற்றால், அளவு அறிந்து உண்க! அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு.

943

பதிவிறக்கம் செய்ய
உரை
 
944. அற்றது அறிந்து, கடைப்பிடித்து, மாறு அல்ல
துய்க்க, துவரப் பசித்து!.

944

பதிவிறக்கம் செய்ய
உரை
 
945. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்,
ஊறுபாடு இல்லை, உயிர்க்கு.

945

பதிவிறக்கம் செய்ய
உரை
 
946. இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல், நிற்கும்,
கழி பேர் இரையான்கண் நோய்.

946

பதிவிறக்கம் செய்ய
உரை
 
947. தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்,
நோய் அளவு இன்றிப் படும்.

947

பதிவிறக்கம் செய்ய
உரை
 
948. நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும்
வாய் நாடி, வாய்ப்பச் செயல்!.

948

பதிவிறக்கம் செய்ய
உரை
 
949. உற்றான் அளவும், பிணி அளவும், காலமும்,
கற்றான், கருதிச் செயல்!.

949

பதிவிறக்கம் செய்ய
உரை
 
950. உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான், என்று
அப் பால் நாற் கூற்றே-மருந்து.

950

பதிவிறக்கம் செய்ய
உரை