மானம்
 
961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்,
குன்ற வருப விடல்.

961

பதிவிறக்கம் செய்ய
உரை
 
962. சீரினும், சீர் அல்ல செய்யாரே-சீரொடு
பேராண்மை வேண்டுபவர்.

962

பதிவிறக்கம் செய்ய
உரை
 
963. பெருக்கத்து வேண்டும், பணிதல்; சிறிய
சுருக்கத்து வேண்டும், உயர்வு.

963

பதிவிறக்கம் செய்ய
உரை
 
964. தலையின் இழிந்த மயிர் அனையர்-மாந்தர்
நிலையின் இழிந்தக்கடை.

964

பதிவிறக்கம் செய்ய
உரை
 
965. குன்றின் அனையாரும் குன்றுவர்-குன்றுவ
குன்றி அனைய செயின்.

965

பதிவிறக்கம் செய்ய
உரை
 
966. புகழ் இன்றால்; புத்தேள் நாட்டு உய்யாதால்; என் மற்று,
இகழ்வார்பின் சென்று நிலை?.

966

பதிவிறக்கம் செய்ய
உரை
 
967. ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின், அந் நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

967

பதிவிறக்கம் செய்ய
உரை
 
968. மருந்தோ, மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை-பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து?.

968

பதிவிறக்கம் செய்ய
உரை
 
969. மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர், மானம் வரின்.

969

பதிவிறக்கம் செய்ய
உரை
 
970. இளி வரின், வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும், உலகு.

970

பதிவிறக்கம் செய்ய
உரை