பெருமை
 
971. ஒளி, ஒருவற்கு உள்ள வெறுக்கை; இளி ஒருவற்கு,
‘அஃது இறந்து வாழ்தும்’ எனல்.

971

பதிவிறக்கம் செய்ய
உரை
 
972. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா,
செய்தொழில் வேற்றுமையான்.

972

பதிவிறக்கம் செய்ய
உரை
 
973. மேல் இருந்தும், மேல் அல்லார் மேல் அல்லர்; கீழ் இருந்தும்,
கீழ் அல்லார், கீழ் அல்லவர்.

973

பதிவிறக்கம் செய்ய
உரை
 
974. ஒருமை மகளிரே போல, பெருமையும்,
தன்னைத்தான் கொண்டு ஒழுகின், உண்டு.

974

பதிவிறக்கம் செய்ய
உரை
 
975. பெருமை உடையவர் ஆற்றுவார்-ஆற்றின்
அருமை உடைய செயல்.

975

பதிவிறக்கம் செய்ய
உரை
 
976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை-'பெரியாரைப்
பேணிக் கொள்வேம்' என்னும் நோக்கு.

976

பதிவிறக்கம் செய்ய
உரை
 
977. இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும்தான்
சீர் அல்லவர்கண் படின்.

977

பதிவிறக்கம் செய்ய
உரை
 
978. பணியுமாம், என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம், தன்னை வியந்து.

978

பதிவிறக்கம் செய்ய
உரை
 
979. பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்துவிடல்.

979

பதிவிறக்கம் செய்ய
உரை
 
980. அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான்
குற்றமே கூறிவிடும்.

980

பதிவிறக்கம் செய்ய
உரை