சான்றாண்மை
 
981. கடன் என்ப, நல்லவை எல்லாம்-கடன் அறிந்து,
சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு.

981

பதிவிறக்கம் செய்ய
உரை
 
982. குண நலம், சான்றோர் நலனே; பிற நலம்
எந் நலத்து உள்ளதூஉம் அன்று.

982

பதிவிறக்கம் செய்ய
உரை
 
983. அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு
ஐந்து-சால்பு ஊன்றிய தூண்.

983

பதிவிறக்கம் செய்ய
உரை
 
984. கொல்லா நலத்தது, நோன்மை;-பிறர் தீமை
சொல்லா நலத்தது, சால்பு.

984

பதிவிறக்கம் செய்ய
உரை
 
985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

985

பதிவிறக்கம் செய்ய
உரை
 
986. 'சால்பிற்குக் கட்டளை யாது?' எனின், தோல்வி
துலை அல்லார்கண்ணும் கொளல்.

986

பதிவிறக்கம் செய்ய
உரை
 
987. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்,
என்ன பயத்ததோ, சால்பு?.

987

பதிவிறக்கம் செய்ய
உரை
 
988. இன்மை ஒருவற்கு இளிவு அன்று-சால்பு என்னும்
திண்மை உண்டாகப்பெறின்.

988

பதிவிறக்கம் செய்ய
உரை
 
989. ஊழி பெயரினும், தாம் பெயரார்-சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார்.

989

பதிவிறக்கம் செய்ய
உரை
 
990. சான்றவர் சான்றாண்மை குன்றின், இரு நிலம்தான்
தாங்காது மன்னோ, பொறை!.

990

பதிவிறக்கம் செய்ய
உரை