தொடக்கம் | ||
பண்பு உடைமை
|
||
991. | எண் பதத்தால், எய்தல் எளிது என்ப, யார்மாட்டும், பண்பு உடைமை என்னும் வழக்கு. |
991 பதிவிறக்கம் செய்யஉரை |
992. | அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ் இரண்டும் பண்பு உடைமை என்னும் வழக்கு. |
992 பதிவிறக்கம் செய்யஉரை |
993. | உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால்; வெறுத்தக்க பண்பு ஒத்தல், ஒப்பது ஆம் ஒப்பு. |
993 பதிவிறக்கம் செய்யஉரை |
994. | நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு பாராட்டும், உலகு. |
994 பதிவிறக்கம் செய்யஉரை |
995. | நகையுள்ளும் இன்னாது, இகழ்ச்சி; பகையுள்ளும் பண்பு உள, பாடு அறிவார் மாட்டு. |
995 பதிவிறக்கம் செய்யஉரை |
996. | பண்பு உடையார்ப் பட்டு, உண்டு உலகம்; அது இன்றேல், மண் புக்கு மாய்வதுமன். |
996 பதிவிறக்கம் செய்யஉரை |
997. | அரம் போலும் கூர்மையரேனும், மரம் போல்வர், மக்கள் பண்பு இல்லாதவர். |
997 பதிவிறக்கம் செய்யஉரை |
998. | நண்பு ஆற்றார் ஆகி, நயம் இல செய்வார்க்கும், பண்பு ஆற்றாராதல் கடை. |
998 பதிவிறக்கம் செய்யஉரை |
999. | நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம், பகலும், பாற் பட்டன்று, இருள். |
999 பதிவிறக்கம் செய்யஉரை |
1000. | பண்பு இலான் பெற்ற பெருஞ் செல்வம்-நன் பால் கலம் தீமையால் திரிந்தற்று. |
1000 பதிவிறக்கம் செய்யஉரை |