நன்றி இல் செல்வம்
 
1001. வைத்தான், வாய் சான்ற பெரும் பொருள்; அஃது உண்ணான்
செத்தான், செயக்கிடந்தது இல்.

1001

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1002. 'பொருளான் ஆம், எல்லாம்' என்று, ஈயாது இவறும்
மருளான், ஆம், மாணாப் பிறப்பு.

1002

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1003. ஈட்டம் இவறி, இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

1003

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1004. எச்சம் என்று என் எண்ணும் கொல்லோ-ஒருவரால்
நச்சப் படாஅதவன்!.

1004

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு, அடுக்கிய
கோடி உண்டாயினும், இல்.

1005

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1006. ஏதம், பெருஞ் செல்வம்-தான் துவ்வான், தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான்.

1006

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1007. அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம்- மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்தற்று.

1007

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1008. நச்சப்படாதவன் செல்வம்-நடுவூருள்
நச்சு மரம் பழுத்தற்று.

1008

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1009. அன்பு ஒரீஇ, தற் செற்று, அறம் நோக்காது, ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார், பிறர்.

1009

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1010. சீருடைச் செல்வர் சிறு துனி-மாரி
வறம் கூர்ந்தனையது உடைத்து.

1010

பதிவிறக்கம் செய்ய
உரை