நாண் உடைமை
 
1011. கருமத்தான் நாணுதல், நாணு; திருநுதல்
நல்லவர் நாணு, பிற.

1011

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1012. ஊண், உடை, எச்சம், உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல;
நாண் உடைமை மாந்தர் சிறப்பு.

1012

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1013. ஊனைக் குறித்த, உயிர் எல்லாம்; நாண் என்னும்
நன்மை குறித்தது, சால்பு.

1013

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1014. அணி அன்றோ, நாண் உடைமை சான்றோர்க்கு! அஃது இன்றேல்
பிணி அன்றே, பீடு நடை!.

1014

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1015. 'பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி' என்னும், உலகு.

1015

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1016. நாண் வேலி கொள்ளாது, மன்னோ, வியல் ஞாலம்
பேணலர்-மேலாயவர்.

1016

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1017. நாணால் உயிரைத் துறப்பர்; உயிர்ப்பொருட்டால்
நாண் துறவார்;-நாண் ஆள்பவர்.

1017

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1018. பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின்,
அறம் நாணத் தக்கது உடைத்து.

1018

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1019. குலம் சுடும், கொள்கை பிழைப்பின், நலம் சுடும்,
நாண் இன்மை நின்றக்கடை.

1019

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1020. நாண் அகத்து இல்லார் இயக்கம்-மரப்பாவை
நாணால் உயிர் மருட்டியற்று.

1020

பதிவிறக்கம் செய்ய
உரை