நல்குரவு
 
1041. 'இன்மையின் இன்னாதது யாது?' எனின், இன்மையின்
இன்மையே இன்னாதது.

1041

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1042. இன்மை என ஒரு பாவி, மறுமையும்
இம்மையும் இன்றி, வரும்.

1042

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1043. தொல் வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக-
நல்குரவு என்னும் நசை.

1043

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1044. இற்பிறந்தார்கண்ணேயும், இன்மை, இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும்.

1044

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1045. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

1045

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1046. நற் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார்
சொல் பொருட் சோர்வு படும்.

1046

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1047. அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும்,
பிறன் போல நோக்கப்படும்.

1047

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1048. இன்றும் வருவது கொல்லோ-நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு!.

1048

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது.

1049

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1050. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

1050

பதிவிறக்கம் செய்ய
உரை