கயமை
 
1071. மக்களே போல்வர், கயவர்; அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்டது இல்.

1071

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1072. நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்-
நெஞ்சத்து அவலம் இலர்!.

1072

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1073. தேவர் அனையர், கயவர்-அவரும் தாம்
மேவன செய்து, ஒழுகலான்!.

1073

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1074. அகப் பட்டி ஆவாரைக் காணின், அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும், கீழ்.

1074

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1075. அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம்
அவா உண்டேல், உண்டாம் சிறிது.

1075

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1076. அறை பறை அன்னர் கயவர்-தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான்.

1076

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1077. ஈர்ங் கை விதிரார் கயவர்-கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு.

1077

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1078. சொல்ல, பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்ல, பயன்படும் கீழ்.

1078

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின், பிறர்மேல்
வடுக் காண வற்று ஆகும், கீழ்.

1079

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1080. எற்றிற்கு உரியர் கயவர்-ஒன்று உற்றக்கால்,
விற்றற்கு உரியர் விரைந்து.

1080

பதிவிறக்கம் செய்ய
உரை