தகை அணங்கு உறுத்தல்
 
1081. அணங்குகொல்! ஆய் மயில்கொல்லோ!- கனங்குழை-
மாதர்கொல்! மாலும், என் நெஞ்சு.

1081

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1082. நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல்-தாக்கு அணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து.

1082

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1083. பண்டு அறியேன், ‘கூற்று’ என்பதனை; இனி அறிந்தேன்;
பெண்தகையான் பேர் அமர்க் கட்டு.

1083

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1084. கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான், பெண் தகைப்
பேதைக்கு, அமர்த்தன கண்.

1084

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1085. கூற்றமோ! கண்ணோ! பிணையோ!- மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து.

1085

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1086. கொடும் புருவம் கோடா மறைப்பின், நடுங்கு அஞர்
செய்யலமன், இவள் கண்.

1086

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1087. கடாஅக் களிற்றின்மேல் கண் படாம்-மாதர்
படாஅ முலைமேல் துகில்!.

1087

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1088. ஒள் நுதற்கு, ஓஒ! உடைந்ததே-ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு!.

1088

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1089. பிணை ஏர் மட நோக்கும், நாணும் உடையாட்கு
அணி எவனோ, ஏதில தந்து?.

1089

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1090. உண்டார்கண் அல்லது, அடு நறா, காமம்போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று.

1090

பதிவிறக்கம் செய்ய
உரை