குறிப்பு அறிதல்
 
1091. இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு
நோய் நோக்கு; ஒன்று அந் நோய் மருந்து.

1091

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1092. கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று; பெரிது.

1092

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1093. நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள்; அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

1093

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1094. யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால்,
தான் நோக்கி, மெல்ல நகும்.

1094

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்.

1095

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1096. உறாஅதவர்போல் சொலினும், செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும்.

1096

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1097. செறாஅச் சிறு சொல்லும், செற்றார்போல் நோக்கும்,-
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு.

1097

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1098. அசையியற்கு உண்டு, ஆண்டு ஓர் ஏஎர்; யான் நோக்க,
பசையினள், பைய நகும்.

1098

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

1099

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1100. கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல.

1100

பதிவிறக்கம் செய்ய
உரை