தொடக்கம் | ||
புணர்ச்சி மகிழ்தல்
|
||
1101. | கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறியும் ஐம்புலனும் ஒண்டொடிகண்ணே உள. |
1101 பதிவிறக்கம் செய்யஉரை |
1102. | பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. |
1102 பதிவிறக்கம் செய்யஉரை |
1103. | தாம் வீழ்வார் மென் தோள்-துயிலின் இனிதுகொல்- தாமரைக்கண்ணான் உலகு?. |
1103 பதிவிறக்கம் செய்யஉரை |
1104. | நீங்கின் தெறூஉம், குறுகுங்கால் தண்ணென்னும், தீ யாண்டுப் பெற்றாள், இவள்?. |
1104 பதிவிறக்கம் செய்யஉரை |
1105. | வேட்ட பொழுதின் அவை அவை போலுமே- தோட்டார் கதுப்பினாள் தோள். |
1105 பதிவிறக்கம் செய்யஉரை |
1106. | உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான், பேதைக்கு அமிழ்தின் இயன்றன, தோள். |
1106 பதிவிறக்கம் செய்யஉரை |
1107. | தம் இல் இருந்து, தமது பாத்து உண்டற்றால்- அம் மா அரிவை முயக்கு. |
1107 பதிவிறக்கம் செய்யஉரை |
1108. | வீழும் இருவர்க்கு இனிதே-வளி இடை போழப் படாஅ முயக்கு. |
1108 பதிவிறக்கம் செய்யஉரை |
1109. | ஊடல், உணர்தல், புணர்தல் இவை-காமம் கூடியார் பெற்ற பயன். |
1109 பதிவிறக்கம் செய்யஉரை |
1110. | அறிதோறு அறியாமை கண்டற்றால்-காமம் செறிதோறும் சேயிழைமாட்டு. |
1110 பதிவிறக்கம் செய்யஉரை |