நாணுத் துறவு உரைத்தல்
 
1131. காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம
மடல் அல்லது இல்லை, வலி.

1131

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1132. நோனா உடம்பும் உயிரும், மடல் ஏறும்-
நாணினை நீக்கி நிறுத்து.

1132

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1133. நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன்; இன்று உடையேன்,
காமுற்றார் ஏறும் மடல்.

1133

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1134. காமக் கடும் புனல் உய்க்குமே-நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை.

1134

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு
மாலை உழக்கும் துயர்.

1135

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1136. மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற;-
படல் ஒல்லா, பேதைக்கு என் கண்.

1136

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1137. கடல் அன்ன காமம் உழந்தும், மடல் ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.

1137

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1138. 'நிறை அரியர்; மன் அளியர்' என்னாது, காமம்
மறை இறந்து, மன்று படும்.

1138

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1139. 'அறிகிலார், எல்லாரும்' என்றே, என் காமம்
மறுகில் மறுகும், மருண்டு.

1139

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1140. யாம் கண்ணின் காண நகுப, அறிவு இல்லார்-
யாம் பட்ட தாம் படாவாறு.

1140

பதிவிறக்கம் செய்ய
உரை