அலர் அறிவுறுத்தல்
 
1141. அலர் எழ, ஆர் உயிர் நிற்கும்; அதனைப்
பலர் அறியார், பாக்கியத்தால்.

1141

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1142. மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது,
அலர் எமக்கு ஈந்தது, இவ் ஊர்.

1142

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1143. உறாஅதோ, ஊர் அறிந்த கௌவை? அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

1143

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1144. கவ்வையான் கவ்விது, காமம்; அது இன்றேல்,
தவ்வென்னும், தன்மை இழந்து.

1144

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1145. களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால்-காமம்
வெளிப்படும்தோறும் இனிது.

1145

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1146. கண்டது மன்னும் ஒரு நாள்; அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று.

1146

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1147. ஊரவர் கௌவை எருவாக,அன்னை சொல்
நீராக, நீளும்-இந் நோய்.

1147

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1148. 'நெய்யால் எரி நுதுப்பேம்' என்றற்றால்-'கௌவையான்
காமம் நுதுப்பேம்' எனல்.

1148

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1149. அலர் நாண ஒல்வதோ-'அஞ்சல் ஓம்பு!' என்றார்
பலர் நாண நீத்தக்கடை?.

1149

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1150. தாம் வேண்டின் நல்குவர், காதலர்; யாம் வேண்டும்
கௌவை எடுக்கும், இவ் ஊர்.

1150

பதிவிறக்கம் செய்ய
உரை