பிரிவு ஆற்றாமை
 
1151. செல்லாமை உண்டேல், எனக்கு உரை; மற்று நின்
வல்வரவு, வாழ்வார்க்கு உரை.

1151

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1152. இன்கண் உடைத்து அவர் பார்வல்; பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால், புணர்வு.

1152

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1153. அரிதுஅரோ, தேற்றம்-அறிவுடையார்கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான்.

1153

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1154. அளித்து, ‘அஞ்சல்!’ என்றவர் நீப்பின், தெளித்த சொல்
தேறியார்க்கு உண்டோ, தவறு?.

1154

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1155. ஓம்பின், அமைந்தார் பிரிவு ஓம்பல்! மற்று அவர்
நீங்கின், அரிதால், புணர்வு!.

1155

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1156. பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரிது, ‘அவர்
நல்குவர்’ என்னும் நசை.

1156

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1157. துறைவன் துறந்தமை தூற்றாகொல்-முன்கை
இறை இறவாநின்ற வளை!.

1157

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1158. இன்னாது, இனன் இல் ஊர் வாழ்தல்; அதனினும்
இன்னாது, இனியார்ப் பிரிவு.

1158

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1159. தொடின் சுடின் அல்லது, காமநோய் போல,
விடின் சுடல் ஆற்றுமோ, தீ?.

1159

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1160. அரிது ஆற்றி, அல்லல் நோய் நீக்கி, பிரிவு ஆற்றி,
பின் இருந்து, வாழ்வார் பலர்.

1160

பதிவிறக்கம் செய்ய
உரை