கண் விதுப்பு அழிதல்
 
1171. கண்தாம் கலுழ்வது எவன்கொலோ-தண்டா நோய்,
தாம் காட்ட, யாம் கண்டது!.

1171

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1172. தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா,
பைதல் உழப்பது எவன்?.

1172

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1173. கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இது நகத்தக்கது உடைத்து.

1173

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1174. பெயல் ஆற்றா நீர் உலந்த, உண்கண்-உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என்கண் நிறுத்து.

1174

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1175. படல் ஆற்றா, பைதல் உழக்கும்-கடல் ஆற்றாக்
காம நோய் செய்த என் கண்.

1175

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1176. ஓஒ, இனிதே!-எமக்கு இந் நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது.

1176

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1177. உழந்து உழந்து உள்நீர் அறுக-விழைந்து இழைந்து
வேண்டி அவர்க் கண்ட கண்!.

1177

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ-மற்று அவர்க்
காணாது அமைவு இல கண்.

1178

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1179. வாராக்கால், துஞ்சா; வரின், துஞ்சா; ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண்.

1179

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1180. மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால்-எம்போல்
அறை பறை கண்ணார் அகத்து.

1180

பதிவிறக்கம் செய்ய
உரை