உறுப்பு நலன் அழிதல்
 
1231. சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி,
நறு மலர் நாணின, கண்.

1231

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்-
பசந்து பனி வாரும் கண்.

1232

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1233. தணந்தமை சால அறிவிப்ப போலும்-
மணந்த நாள் வீங்கிய தோள்.

1233

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1234. பணை நீங்கிப் பைந் தொடி சோரும்-துணை நீங்கித்
தொல் கவின் வாடிய தோள்.

1234

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1235. கொடியார் கொடுமை உரைக்கும்-தொடியொடு
தொல் கவின் வாடிய தோள்.

1235

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1236. தொடியொடு தோள் நெகிழ நோவல்-அவரை,
‘கொடியர்’ எனக் கூறல் நொந்து.

1236

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1237. பாடு பெறுதியோ-நெஞ்சே!-கொடியார்க்கு என்
வாடு தோட் பூசல் உரைத்து?.

1237

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1238. முயங்கிய கைகளை ஊக்க, பசந்தது-
பைந் தொடிப் பேதை நுதல்!.

1238

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1239. முயக்கிடைத் தண் வளி போழ, பசப்பு உற்ற-
பேதை பெரு மழைக்கண்.

1239

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1240. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே-
ஒள் நுதல் செய்தது கண்டு.

1240

பதிவிறக்கம் செய்ய
உரை