அவர்வயின் விதும்பல்
 
1261. வாள் அற்றுப் புற்கென்ற, கண்ணும்; அவர் சென்ற
நாள் ஒற்றித் தேய்ந்த, விரல்.

1261

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1262. இலங்கிழாய்! இன்று மறப்பின், என் தோள்மேல்
கலம் கழியும், காரிகை நீத்து.

1262

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1263. உரன் நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார்
வரல் நசைஇ, இன்னும் உளேன்.

1263

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1264. கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி,
கோடு கொடு ஏறும், என் நெஞ்சு.

1264

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1265. காண்கமன், கொண்கனைக் கண் ஆர; கண்டபின்,
நீங்கும், என் மென் தோட் பசப்பு.

1265

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1266. வருகமன், கொண்கன் ஒருநாள்; பருகுவன்,
பைதல்நோய் எல்லாம் கெட.

1266

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1267. புலப்பேன்கொல்-புல்லுவேன் கொல்லோ-கலப்பேன்கொல்-
கண் அன்ன கேளிர் வரின்?.

1267

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1268. வினை கலந்து வென்றீக, வேந்தன்! மனை கலந்து
மாலை அயர்கம், விருந்து!.

1268

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1269. ஒரு நாள் எழு நாள்போல் செல்லும்-சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு.

1269

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1270. பெறின் என் ஆம்-பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம்-
உள்ளம் உடைந்து உக்கக்கால்?.

1270

பதிவிறக்கம் செய்ய
உரை