குறிப்பு அறிவுறுத்தல்
 
1271. கரப்பினும், கையிகந்து ஒல்லா, நின் உண்கண்
உரைக்கல் உறுவது ஒன்று உண்டு.

1271

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1272. கண் நிறைந்த காரிகை, காம்பு ஏர் தோள், பேதைக்குப்
பெண் நிறைந்த நீர்மை பெரிது.

1272

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1273. மணியுள் திகழ்தரும் நூல்போல், மடந்தை
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு.

1273

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1274. முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல், பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு.

1274

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1275. செறிதொடி செய்து இறந்த கள்ளம், உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து.

1275

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1276. பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல், அரிது ஆற்றி,
அன்பு இன்மை சூழ்வது உடைத்து.

1276

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1277. தண்ணந் துறைவன் தணந்தமை, நம்மினும்
முன்னம் உணர்ந்த, வளை.

1277

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1278. நெருநற்றுச் சென்றார் எம் காதலர்; யாமும்
எழு நாளேம், மேனி பசந்து.

1278

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1279. தொடி நோக்கி, மென் தோளும் நோக்கி, அடி நோக்கி,
அஃது, ஆண்டு அவள் செய்தது.

1279

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1280. பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப-கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு.

1280

பதிவிறக்கம் செய்ய
உரை