புலவி
 
1301. புல்லாது இராஅப் புலத்தை; அவர் உறும்
அல்லல் நோய் காண்கம், சிறிது.

1301

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1302. உப்பு அமைந்தற்றால், புலவி; அது சிறிது
மிக்கற்றால், நீள விடல்.

1302

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1303. அலந்தாரை அல்லல் நோய் செய்தற்றால்-தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

1303

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1304. ஊடியவரை உணராமை-வாடிய
வள்ளி முதல் அரிந்தற்று.

1304

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர், புலத் தகை,
பூ அன்ன கண்ணார் அகத்து.

1305

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1306. துனியும் புலவியும் இல்லாயின், காமம்
கனியும் கருக்காயும் அற்று.

1306

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1307. ஊடலின் உண்டு ஆங்கு ஓர் துன்பம்-'புணர்வது
நீடுவது அன்றுகொல்!' என்று.

1307

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1308. நோதல் எவன், மற்று-'நொந்தார்' என்று அஃது அறியும்
காதலர் இல்லாவழி.

1308

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1309. நீரும் நிழலது இனிதே; புலவியும்
வீழுநர்கண்ணே இனிது.

1309

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1310. ஊடல் உணங்க, விடுவாரொடு, என் நெஞ்சம்,
‘கூடுவேம்’ என்பது அவா.

1310

பதிவிறக்கம் செய்ய
உரை