புலவி நுணுக்கம்
 
1311. பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்;
நண்ணேன்-பரத்த!-நின் மார்பு.

1311

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1312. ஊடி இருந்தேமா, தும்மினார்-யாம் தம்மை,
‘நீடு வாழ்க!’ என்பாக்கு அறிந்து.

1312

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1313. கோட்டுப் பூச் சூடினும் காயும்-'ஒருத்தியைக்
காட்டிய சூடினீர்!' என்று.

1313

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1314. 'யாரினும் காதலம்' என்றேனா, ஊடினாள்-
‘யாரினும்! யாரினும்!’ என்று.

1314

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1315. 'இம்மைப் பிறப்பில் பிரியலம்' என்றேனா,
கண் நிறை நீர் கொண்டனள்.

1315

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1316. 'உள்ளினேன்' என்றேன்; ‘மற்று என் மறந்தீர்’ என்று என்னைப்
புல்லாள், புலத்தக்கனள்.

1316

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1317. வழுத்தினாள், தும்மினேனாக; அழித்து அழுதாள்,
‘யார் உள்ளித் தும்மினீர்?’ என்று.

1317

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1318. தும்முச் செறுப்ப, அழுதாள், ‘நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ?’ என்று.

1318

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1319. தன்னை உணர்த்தினும் காயும், ‘பிறர்க்கும் நீர்
இந் நீரர் ஆகுதிர்!’ என்று.

1319

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1320. நினைத்திருந்து நோக்கினும், காயும், ‘அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர்?’ என்று.

1320

பதிவிறக்கம் செய்ய
உரை