பண்புடைமை
1000பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

பாத்திரம்  களிம்பு பிடித்திருந்தால்,  அதில் ஊற்றி வைக்கப்படும் பால்
எப்படிக்   கெட்டுவிடுமோ  அதுபோலப்  பண்பு  இல்லாதவர்கள்  பெற்ற
செல்வமும் பயனற்றதாகி விடும்.