நன்றியில் செல்வம்
1001வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.

அடங்காத  ஆசையினால்  வீடு  கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச்
சேர்த்து  வைத்து   அதனை   அனுபவிக்காமல்   செத்துப்போகிறவனுக்கு.
அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?