நன்றியில் செல்வம்
1006ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் றக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்.

தானும்   அனுபவிக்காமல்   தக்கவர்களுக்கு   உதவிடும்    இயல்பும்
இல்லாமல்   வாழ்கிறவன்,     தன்னிடமுள்ள      பெருஞ்செல்வத்தைத்
தொற்றிக்கொண்ட நோயாவான்.