நன்றியில் செல்வம்
1010சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.

சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின்
நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.