நாணுடைமை
1014அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை.

நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு,
பெரியவர்களுக்கு  அணிகலன்   ஆக   விளங்கும்.   அந்த  அணிகலன்
இல்லாமல்  என்னதான்  பெருமிதமாக நடைபோட்டாலும்,  அந்த நடையை
ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.