நாணுடைமை
1017நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்.

நாண   உணர்வுடையவர்கள்   மானத்தைக்   காப்பாற்றிக்   கொள்ள
உயிரையும்    விடுவார்கள்.   உயிரைக்    காப்பாற்றிக்   கொள்வதற்காக
மானத்தை விடமாட்டார்கள்.