குடிசெயல்வகை
1025குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு.

குற்றமற்றவனாகவும்,  குடிமக்களின்   நலத்திற்குப்  பாடுபடுபவனாகவும்
இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.