உழவு
1031சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழன்று முழவே தலை.

பல  தொழில்களைச்  செய்து சுழன்று  கொண்டிருக்கும்  இந்த உலகம்,
ஏர்த்தொழிலின்    பின்னேதான்    சுற்ற  வேண்டியிருக்கிறது.   எனவே
எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.