குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நல்குரவு
1041
இன்மையி னின்னாத தியாதெனி னின்மையின்
இன்மையே யின்னா தது.
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத்
துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.