இரவு
1052இன்ப மொருவர்க் கிரத்த லிரந்தவை
துன்பம் முறாஅ வரின்.

வழங்குபவர்,  வாங்குபவர்   ஆகிய   இருவர்  மனத்திற்கும்  துன்பம்
எதுவுமின்றி   ஒருபொருள்    கிடைக்குமானால்,   அப்பொருள்   இரந்து
பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.