இரவச்சம்
1070கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ இரப்பார்க்குச்
சொல்லாடப் போஒ முயிர்.

இருப்பதை  ஒளித்துக்கொண்டு  'இல்லை'  என்பவர்களின்  சொல்லைக்
கேட்டவுடன்,   இரப்போரின்   உயிரே   போய்   விடுகிறதே;  அப்படிச்
சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?